இன்று முதல் கொடைக்கானல் செல்லும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்
கொடைக்கானல், 03 மே (ஹி.ச.) கோடை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் அதிகரித்த வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்திற்குச் செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும்
ரயில்


கொடைக்கானல், 03 மே (ஹி.ச.)

கோடை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் அதிகரித்த வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்திற்குச் செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இன்று முதல் இயக்கத் தொடங்கியுள்ளது.

இது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, கோவை – கொடைக்கானல் சாலை இடையே இன்று முதல் தினசரி சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் கோவையிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.05 மணிக்கு கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக, கோடைக்கானல் சாலையிலிருந்து இந்த சிறப்பு ரயில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.45 மணிக்கு கோவையை வந்தடையும்.

அதேபோல், செங்கோட்டை – கொடைக்கானல் சாலை இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து இன்று இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு கோடைக்கானல் சாலை சென்றடையும்.

பின்னர், கொடைக்கானல் சாலையிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 10.30 மணிக்கு செங்கோட்டையை அடையும்.

கோடை சீசனில் கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இந்த சிறப்பு ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்து பயணிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P