Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 மே (ஹி.ச.)
கருத்து வேறுபாடுகளை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள வேண்டும்; சட்டத்தின் வழியே தீர்வு காண வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
வழக்கறிஞர் நெல்சன் அவர்களின் இல்லத்திற்குள் புகுந்து, அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கிய சம்பவம் மிகவும் கேவலமானதும் அநாகரிகமானதுமான செயல் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி கும்பலினர்மீது காவல்துறை உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், “மாற்று அரசியல்” என்ற பெயரில் இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஜனநாயக முறையில் கேள்வி எழுப்புவோரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது தவறான அரசியல் கலாசாரம் எனவும் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் தொடர்புடையவர்கள்மீது சம்பந்தப்பட்ட கட்சி நடவடிக்கை எடுக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ