Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 03 மே (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கழுகரை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கவியரசு (28) என்ற கூலித் தொழிலாளி இப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி அருந்தி உள்ளார்.
அப்போது பாரின் முன் பக்கம் இரும்பால் செய்யப்பட்ட பெட்டிக்கடை மீது கவியரசு கை வைத்ததாக தெரிகிறது. பெட்டிக்கடையில் எதிர்பாரத விதமாக மின்கசிவு ஏற்பட்டு கவியரசு மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட கவியரசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மடத்துக்குளம் காவல்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின் இணைப்பை துண்டித்து, பலியான கவியரசின் உடல் மீட்கபட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மடத்துக்குளம் அருகே அரசு மதுபான கடை பார் அருகில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN