இன்று பிற்பகல் நடக்கும் நீட் தேர்வு - கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..!
தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.) இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்கள் பிற்பகல் 1.30 மணிக்குள் த
நீட்


தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.)

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்கள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு அறைகளில் இருக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

புகைப்படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட், ஆதார் அல்லது வேறு ஏதாவது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒளிபுகும் தண்ணீர் bottle மட்டுமே மாணவர்கள் எடுத்து வரலாம்.

பேனா, பேப்பர், பென்சில் பாக்ஸ் மற்றும் கைபேசி, ப்ளூடூத் உள்ளிட்ட கருவிகள் பெல்ட், தொப்பி, பை, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்ட எவைகளுக்கும் அனுமதி இல்லை.

மாணவர்கள் அரைக் கை ஆடைகள், ஸ்லிப்பர், Low heel செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும்.

பல இடங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் ஆவணங்களை பத்திரமாக எடுத்து வர தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, 'டெலி கவுன்சிலிங்' (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம்.

24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P