இன்று நீட் தேர்வு- தமிழகத்தில் 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.) இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இன்று (மே 3) நாடு முழுவதும் நடைபெறுகிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங
நீட்


தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.)

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இன்று (மே 3) நாடு முழுவதும் நடைபெறுகிறது.

மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிகமான மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தேர்வை NTA நடத்துகிறது.

அனைத்து மையங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் CCTV கண்காணிப்பு, உலோகம் கண்டறியும் கருவிகள், மற்றும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட், செல்லுபடியாகும் அடையாள அட்டை, மற்றும் தேவையான ஆவணங்கள் கட்டாயமாக கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

உடை குறித்த விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால், எளிய உடையுடன் மாணவர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தேர்வு மையங்கள் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

NEET தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam