Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 03 மே (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஞாயிறு விடுமுறை, கோடை பள்ளி விடுமுறையால் நேற்று இரவு முதலே பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது.
இன்று அதிகாலை முதலே இடும்பன் குளம் மற்றும் சண்முக நதியில் நீராடிய பக்தர்கள், மலைக்கோயிலுக்குச் செல்ல கிரிவீதி மற்றும் சன்னதி வீதிகளில் குவியத் தொடங்கினர்.
பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகள் அனைத்தும் நீண்டிருந்தன. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானைத் தரிசித்தனர்.
கடும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்கக் கோயில் நிர்வாகம் சார்பில் வரிசையில் நின்ற பக்தர்களுக்குக் குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.
ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், அங்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
Hindusthan Samachar / ANANDHAN