Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 மே (ஹி.ச.)
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரக்கூடும் என்ற தகவல்கள் பரவிய நிலையில், பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84க்கும், டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சிஎன்ஜி ஒரு கிலோ ரூ.91.50 என்ற விலையிலும் விற்பனை தொடர்கிறது.
இந்த விலைகளில் நேற்று இருந்ததைப் போலவே இன்று எந்த உயர்வும்,குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம், நாணய மாற்று விகிதம், வரி அமைப்பு உள்ளிட்ட பல காரணிகள் எரிபொருள் விலையை நிர்ணயிக்கின்றன.
குறிப்பாக தேர்தல் காலங்களில் விலை உயர்வு குறித்து அடிக்கடி ஊகங்கள் வெளியாகும்.
அதேபோல், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தலாம் என்ற தகவலும் பரவியது.
ஆனால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தற்போதைக்கு விலையில் எந்த மாற்றமும் செய்யாமல், முந்தைய விலையிலேயே விற்பனையைத் தொடர்ந்து வருகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தற்காலிக நிம்மதி அடைந்துள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, விலை மாற்றம் குறித்த எந்த அறிவிப்பும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை நிலவரம் மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழலைப் பொறுத்து எதிர்காலத்தில் விலை மாற்றம் இருக்கக்கூடும் என்றாலும், தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் நிலையான நிலையில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P