Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 03 மே (ஹி.ச.)
காங்கிரஸ் அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று முன்னாள் கார்ப்பரேஷன் தலைவர் எர்ரோள்ள ஸ்ரீனிவாஸ் கடுமையாக விமர்சித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா பவன் வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காங்கிரஸ் என்றாலே ஊழல், ஊழல் என்றாலே காங்கிரஸ் என்று தாக்குதலாக பேசினார்.
மேலும், ஊழலுக்காக ஒரு கல்லூரி தொடங்கினால், அதற்கான பாடத்திட்டமாக காங்கிரஸ் அரசு இருக்கும் என்று கிண்டலாக கூறினார்.
ஹேம் சாலை திட்டங்களில் 25 சதவீதம் அதிகப்படியான டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டவிரோத சுரங்கத் தோண்டுதல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மௌனம் காக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டிய எர்ரோள்ள ஸ்ரீனிவாஸ், அரசு கருவூலத்திற்கே பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்” என்றார்.
ராகுல் காந்தி தினமும் பா.ஜ.க.வை விமர்சித்து வருகிறார் என்றும், மோடி மற்றும் அதானியிடம் இருந்து ராகுல் காந்தி எவ்வளவு கமிஷன் பெற்றார் என்பதை கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், ராகவா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தெலங்கானா மக்கள் அனைத்தையும் கவனித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
அரசுத் துறைகளில் பல்வேறு வகையான ‘டாக்ஸ்கள்’ வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், “நிதித்துறையில் பாட்டி டாக்ஸ், பாசனத்துறையில் உத்தம் டாக்ஸ், எக்சைஸ் துறையில் ஜூபள்ளி டாக்ஸ், போக்குவரத்துத் துறையில் பொன்னம் டாக்ஸ் வசூலிக்கப்படுகிறது என்று கூறினார்.
இறுதியாக, காங்கிரஸின் உண்மையான பெயர் ‘ஸ்காங்கிரஸ்’” என்றும், “காந்தி பவனிலிருந்தே ஊழல் வரலாறு தொடங்குகிறது” என்றும் எர்ரோள்ள ஸ்ரீனிவாஸ் கடுமையாக விமர்சித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA