Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 03 மே (ஹி.ச.)
கோவை, பேரூர் கோயில் தேரின் வெள்ளி மற்றும் தங்க குண்டுகள் திருடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஊழியரை பேரூர் கோயில் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
பேரூர் பட்டீசுவரர் கோயிலில் உள்ள பழமையான தேரில் வெள்ளிப் பொருட்கள் மற்றும் தங்க குண்டுகள் காணாமல் போன வழக்கில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் கோவிலில் பணிபுரியும் ஆனந்தன் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் நேற்று கோவில் ஊழியர் விவேகானந்தனை பணியில் இருந்து பணிநீக்கம் செய்தது. கோவில் ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு தண்டனை பெற்றிருப்பதும் அவர் கோவில் நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதும் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN