Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 மே (ஹி.ச.)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று
(03-05-26) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்,நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலானவை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதை கூறியிருக்கிறார்கள்.
திமுக தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சில நிறுவனங்கள் அதற்கு நேர்மாறான கருத்துக்களை கூறியிருக்கின்றன.
களத்தில் நேரடியாக மக்களை சந்தித்து இருக்கிறோம். எங்களுடைய பார்வை திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்.
ஆகவே எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக ஆட்சி தொடரும் ஒரு சில தொகுதிகளில் வேலை செய்யவில்லை என்று கட்சியினரை நெறிப்படுத்துவதற்காக சொன்னேன்.
ஒரு சில தொகுதிகளில் உட்கட்சி பிரச்னை காரணமாக கட்சியினர் அவ்வாறு செய்து இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறேன்.
திமுக கூட்டணிக்காக எங்கள் கட்சி தோழர்கள் ஆற்றிய பங்கு போற்றுதலுக்கு உரியது. திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைக் கட்சியை குறிவைத்து, திமுக கூட்டணிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அவர்களின் கனவு நிறைவேறவில்லை.
திமுக கூட்டணியை சிதறடிக்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார்கள். அத்தனை சதிகளையும் விசிக முறியடித்தது.
ஆக்சிஸ் மை இந்தியா, ஓட் வைப்ஸ், ஜேவிசி இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸ் பின்னணியை கொண்டவர்கள், பா.ஜ.க கருத்து ஆதரிக்கக்ககூடிய வலதுசாரி கருத்தை ஆதரிக்கக்கூடிய நிறுவனங்கள் தான் அவ்வாறு செய்திகளை வெளியிடுகிறார்கள். விஜய் பெயரில் ஏராளமாக பெட்டிங் நடக்கிறது.
சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த சூதாட்ட கும்பல் பரப்புகிற வதந்தி தான் இது. தேர்தலுக்கு முன்பு திமுகவை முன்வைத்து சூதாட்டத்தை நடத்தினார்கள்.
அகில உலக அளவில் இது நடைபெறுகிறது. இப்போது தேர்தல் வாக்கு பதிவுக்கு பின்பு விஜயை முன்வைத்து இந்த சூதாட்ட காய்களை நகர்த்துகிறார்கள்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர்கள் ஏமாந்து போவார்கள்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b