Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 03 மே (ஹி.ச.)
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே அருவியில் குவிந்தனர்.
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் அருவியில் கொட்டும் குளிர்ந்த நீரில் கூட்டமாக நின்று நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் கொண்டாட்டமான சூழல் நிலவியது.
மேலும், அருவி அருகில் அமைந்துள்ள நீச்சல் குளங்களிலும் குடும்பத்துடன் வந்தவர்கள், குறிப்பாக குழந்தைகளுடன் நீராடி மகிழ்ந்தனர்.
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகளின் முக்கிய தஞ்சமாக மாறியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam