திருவாரூரில் 43-வது வணிகர் தின மாநாடு – முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு வணிகர் சங்கத்தினர் அழைப்பு
சென்னை, 03 மே (ஹி.ச) தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் அவர்களை, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் நிர்வாகிகள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில்,
Vani


சென்னை, 03 மே (ஹி.ச)

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் அவர்களை, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் நிர்வாகிகள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர்.

பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில், பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் சேப்பாக்கம் வி.பி. மணி, மாவட்ட தலைவர்கள் என்.டி. மோகன், எஸ். சாமுவேல், பி. ஆதிகுருசாமி, ஒய். எட்வர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள், மே 5ஆம் தேதி 43வது வணிகர் தினத்தையொட்டி திருவாரூரில் நடைபெறவுள்ள “வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு” நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதலமைச்சரிடம் வழங்கினர்.

இச்சந்திப்பின் போது, கழக துணைப் பொதுச்செயலாளர்கள்

ஆ. இராசா, எம்.பி., மு.பெ. சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ