தூத்துக்குடியில் இரு இடங்களில் தற்கொலை - குடும்பங்களை அதிர்ச்சியடையச் செய்த சம்பவங்கள்
தூத்துக்குடி, 03 மே (ஹி.ச) தூத்துக்குடி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நடந்த தற்கொலை சம்பவங்கள் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கயத்தாறு தாலுகா சன்னதுபுதூர் கீழூர் காலனி தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ்குமார் (32
Hang


தூத்துக்குடி, 03 மே (ஹி.ச)

தூத்துக்குடி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நடந்த தற்கொலை சம்பவங்கள் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

கயத்தாறு தாலுகா சன்னதுபுதூர் கீழூர் காலனி தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ்குமார் (32), நிரந்தர வேலை இல்லாமல் அடிக்கடி மது அருந்தி சுற்றித் திரிந்தவர் என கூறப்படுகிறது. அவருக்கு மனநல தொடர்பான சிக்கல்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று திருமணங்கள் செய்திருந்த அவர், முதல் இரண்டு மனைவிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுள்ளனர்.

தற்போது மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து வந்த அவர், முதல் மனைவியின் மூலம் 11 வயது மகனுக்கு தந்தை ஆவார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு வந்த அவர், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இன்று காலை குடும்பத்தினர் கவனித்தபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தகவல் அறிந்த கயத்தாறு காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கடம்பூர் கொள்ளாசாரி தெருவைச் சேர்ந்த தர்மரின் மகன் பாரதி (42), மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தபோதிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அதிக அளவில் மது அருந்திய நிலையில், தற்கொலை செய்யப்போவதாக தந்தையிடம் தெரிவித்ததாகவும், இதனால் குடும்பத்தினர் அவரை கண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் தனது அறைக்குள் சென்றுள்ளார்.

இன்று காலை அவரது தந்தை அறைக்குள் சென்று பார்த்தபோது, சேலையை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்குப்போட்டு உயிரிழந்திருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடம்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு சம்பவங்களும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ