திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலில் வசந்த உற்சவம் - திரளான பக்தர்கள் தரிசனம்
சென்னை, 03 மே (ஹி.ச.) சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள 1500 ஆண்டுகளுக்கும் மேல் பழம்பெருமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத வசந்த உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான
திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் - திரளான  பக்தர்கள் தரிசனம்


சென்னை, 03 மே (ஹி.ச.)

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள 1500 ஆண்டுகளுக்கும் மேல் பழம்பெருமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத வசந்த உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காலை 6 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மலர் அலங்காரம் மற்றும் வண்ண மின்விளக்குகளால் கோயில் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

வசந்த மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தியாகராஜ சுவாமி, வடிவுடை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாதஸ்வரம், தவில் இசை முழங்க உற்சவர் வீதியுலா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அன்னதானம், நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி மற்றும் மருத்துவ முகாம் ஆகியவை செய்யப்பட்டிருந்தன.

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த நிலையில், வரும் நாட்களிலும் வசந்த உற்சவ நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b