Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 03 மே (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மகேந்திரா வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது.
வேனில் பயணம் செய்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
கும்பகோணத்திலிருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மகேந்திரா வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, வேனின் டீசல் டேங்க் பகுதியில் திடீரென தீப்பற்றியது.
சில நொடிகளிலேயே தீ வேகமாக பரவி, முழு வேனையும் சூழ்ந்தது.
இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். வேனில் இருந்த அனைவரும் அவசரமாக கீழிறங்கி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
இதனால், வேனில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் எந்தக் காயமும் இன்றி உயிர்தப்பினர்.
ஆனால் தீ வேகமாக பரவியதால் மகேந்திரா வேன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இருப்பினும், அதற்குள் வாகனம் முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீசல் டேங்கில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்திற்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P