ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா - 501 பெண்களுக்கு சேலை வழங்கல்
விருதுநகர், 03 மே (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் அமைந்துள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில்
Fe


விருதுநகர், 03 மே (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் அமைந்துள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில், தினமும் அம்மன் சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

திருவிழாவின் ஆறாம் நாளில், கோவில் வளாகத்தில் கோயமுத்தூர் ஜி.கே. குரூப்ஸ் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏழாயிரம்பண்ணை அன்னை பராசக்தி மாத சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட 501 பெண்களுக்கு, கோயம்புத்தூர் தொழிலதிபர் காளியப்பன் அவர்கள் சேலைகள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Hindusthan Samachar / P YUVARAJ