இன்று (மே3),உலக பத்திரிக்கை சுதந்திர தினம்.!
தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.) பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ஆம் தேதி பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்
க


தமிழ்நாடு, 03 மே (ஹி.ச.)

பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3ஆம் தேதி பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்ட ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும்.

நோக்கம்: பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டாடுவது, உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரத்தின் நிலையை மதிப்பீடு செய்வது மற்றும் தங்கள் பணியின் போது உயிர்நீத்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

வரலாறு: 1991-ல் ஆப்பிரிக்க பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்ட விண்ட்ஹோக் பிரகடனத்தின் (Windhoek Declaration) நினைவாக, 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சிறப்பு: இது ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை உலகிற்கு வலியுறுத்துகிறது.

Hindusthan Samachar / Durai.J