Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (30-05-26) காலமானார்.
நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி (84). இவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக ஏற்படக்கூடிய உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஜித் குமாரின் தாயாரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தாயார் உயிரிழந்த செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் பல அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளத்தில்,
அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN