Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்துள்ள அஜித்குமாருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ