நடிகர் அஜித்தின் தாயார் மோகினி உயிரிழப்பு - துபாய் சென்ற நிலையில் சோகம்!
சென்னை, 30 மே (ஹி.ச.) தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி வயது முதிர்வு காரணமாக காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு 84 வயது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்
அஜித் தாயார்


சென்னை, 30 மே (ஹி.ச.)

தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி வயது முதிர்வு காரணமாக காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு 84 வயது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் திரையுலகிலும், அஜித் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக நடிகர் அஜித் துபாயில் இருந்துவரும் நிலையில், தாயார் மறைவு செய்தியைத் தொடர்ந்து அவர் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.

அஜித்தின் தந்தை சுப்பிரமணி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், தற்போது தாயாரின் மறைவும் குடும்பத்தினருக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

மோகினியின் இறுதிச்சடங்கு சென்னைில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் குடும்பத்தினருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P