மகாநாடு வெற்றியை அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன் – நாரா லோகேஷ்
ஆந்திரா , 30 மே (ஹி.ச.) தெலுங்கு தேசம் கட்சியின் வொர்க்கிங் பிரெசிடென்ட் நாரா லோகேஷ், மகாநாடு 2026 வெற்றியை கட்சியின் அனைத்து தரப்பினருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. கட்சியின் வொர்
A


ஆந்திரா , 30 மே (ஹி.ச.)

தெலுங்கு தேசம் கட்சியின் வொர்க்கிங் பிரெசிடென்ட் நாரா லோகேஷ், மகாநாடு 2026 வெற்றியை கட்சியின் அனைத்து தரப்பினருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

கட்சியின் வொர்க்கிங் பிரெசிடென்ட் பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் மகாநாடு இது.

இந்த மகாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், மகாநாடு குழுக்கள், கட்சி அலுவலக பணியாளர்கள், பின்னணி அலுவலக ஊழியர்கள், தொழில்நுட்ப குழு, சமூக ஊடக அணிகள், என்.ஆர்.ஐ.க்கள், கூட்டணி கட்சிகள், ஊடகத்தினர், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

அவர்களுக்கு தனது நன்றியையும், தலை வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும், நெல்லூரில் நடைபெற இருந்த மகாநாடு, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி மற்றும் அனைவரின் ஒப்புதலுடன் ஹைபிரிட் முறையில் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவது குறித்து சந்திரபாபு நாயுடு அளித்த வழிகாட்டுதலின் பேரில் இந்த ஹைபிரிட் மகாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு கிராமமும் மகாநாட்டின் மேடையாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதாகவும், இது மகாநாட்டின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும் என்றும் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA