Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 30 மே (ஹி.ச.)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக முதல் நடைபெற்று வருகிறது.
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 28 ஆம் தேதி அதிகாலை வெகு விமரிசையாகத் தொடங்கியது. இதனுடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா முறைப்படி தொடங்கியது.
விழாவின் மூன்றாவது நாளான இன்று, பெருமாள் தங்க கருட வாகனத்தில் வெண்பச்சை வண்ணப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து கருட சேவையை தரிசித்து மகிழ்ந்தனர். நான்கு மாட வீதிகளிலும் பெருமாள் வீதியுலா நடைபெற்றபோது, விண்ணதிர கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் வழிபட்டனர்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் பக்தர்களின் வசதிக்காக 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வரும் நாட்களில் தேரோட்டம், தீர்த்தவாரி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b