Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 மே (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் வரும் ஜூன் 1-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், முதலமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த விஜய், அந்த தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில், தேர்தலில் ஆதரவு அளித்த வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் நன்றி தெரிவிக்க உள்ளார்.
மேலும், புதிய அரசின் திட்டங்கள், ஆட்சியின் முன்னுரிமைகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி திருச்சி நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் மேடை மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திருச்சியில் நடைபெறும் முக்கிய பொதுக்கூட்டங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு கருதப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN