மயிலம் தொகுதி மக்களுக்கு 2வது நாளாக நன்றி தெரிவித்த சி.வி. சண்முகம்
சென்னை, 30 மே (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உள்பட்ட கீழ்கரணை பகுதியில், அதிமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், பொதுமக்களைச் சந்தித்து நேற்று நன்றி தெரிவிக்கச் சென்றார். தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும
மயிலம் தொகுதி மக்களுக்கு 2வது நாளாக நன்றி தெரிவித்த சி.வி. சண்முகம்


சென்னை, 30 மே (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உள்பட்ட கீழ்கரணை பகுதியில், அதிமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், பொதுமக்களைச் சந்தித்து நேற்று நன்றி தெரிவிக்கச் சென்றார்.

தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தை அவர், தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக மேற்கொண்டு வருகிறார்.

வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நேரடியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த அவர், தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஒவ்வொருவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மக்கள் மத்தியில் பேசிய சி.வி. சண்முகம்,

தொகுதி மக்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நான் எப்போதும் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பேன். உங்களின் ஒவ்வொரு குரலும் எனக்கு வழிகாட்டும்.

தொகுதியின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அதற்காகக் களத்தில் இறங்கிப் போராடவும் நான் தயாராக இருக்கிறேன். உங்கள் பிரதிநிதியாக, உங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது என் முதல் கடமை

என அவர் பேசினார்.

வெற்றிக்குப் பின்னரும் மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறும் சி.வி. சண்முகத்தின் செயல், தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் தொகுதியின் மற்ற பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b