Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூன் 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளன.
புறநகர் ரயில் சேவைகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயணிகளுக்கு மேலும் சீரான சேவையை வழங்கவும் இந்த நேர மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
புதிய அட்டவணையின்படி, வார நாட்களில் மொத்தம் 106 புறநகர் ரயில் சேவைகளும், வார இறுதி நாட்களில் 96 சேவைகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து முதல் புறநகர் ரயில் அதிகாலை 3.50 மணிக்கும், தாம்பரம் நிலையத்திலிருந்து முதல் ரயில் அதிகாலை 3.55 மணிக்கும் புறப்படும். இரவு 12.50 மணி வரை புறநகர் ரயில் சேவைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில்களுக்கான புதிய நேர அட்டவணையையும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
பயணிகள் புதிய அட்டவணையை கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam