கர்நாடக அரசியலில் புதிய திருப்பம் - சித்தராமையா நிபந்தனைகளால் காங்கிரஸ் மேலிடம் டென்ஷன்
பெங்களூரு, 30 மே (ஹி.ச.) கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிடத்தின் அழுத்தத்துக்கு இணங்கி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதலமைச்சரான டி.கே. சிவகுமார், இன்று காங்கிரஸ் ச
சித்தராமையா


பெங்களூரு, 30 மே (ஹி.ச.)

கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிடத்தின் அழுத்தத்துக்கு இணங்கி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதலமைச்சரான டி.கே. சிவகுமார், இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதன் மூலம் ஜூன் 3ஆம் தேதி அவர் முதலமைச்சராக பதவியேற்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையில், புதிய ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்க சித்தராமையா முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சி மற்றும் அரசுக்கு இடையிலான ஒருங்கிணைப்புப் பொறுப்பை அவர் நாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சித்தராமையாவின் மகன் யதீந்திரா அமைச்சரவையில் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேசமயம், புதிய அரசில் இரண்டு துணை முதலமைச்சர் பதவிகள் உருவாக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதில் சதீஷ் ஜார்கிஹோலி முக்கிய வேட்பாளர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

முன்னதாக சித்தராமையாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் முன்வந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பை அவர் நிராகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P