அரை மணி நேரம் காக்க வைத்ததால் வாக்குவாதம் - டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கிய உணவக மேலாளர்
சென்னை, 30 மே (ஹி.ச.) சென்னை தண்டையார்பேட்டையில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவரை தனியார் உணவக மேலாளர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வடசென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சோமன் (27), சொமேட்டோ நிறுவனத்தில் டெலி
Del


சென்னை, 30 மே (ஹி.ச.)

சென்னை தண்டையார்பேட்டையில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவரை தனியார் உணவக மேலாளர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வடசென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சோமன் (27), சொமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்திற்கு ஆர்டர் செய்யப்பட்ட உணவை பெறச் சென்றுள்ளார்.

அப்போது உணவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த சோமன், நான் நீண்ட நேரமாக காத்திருக்கிறேன்.

உணவை வழங்கினால் அடுத்த ஆர்டருக்கு செல்ல முடியும் என்று மேலாளரிடம் கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த உணவக மேலாளர், சோமனை இழுத்துத் தள்ளி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ