சென்னை நட்சத்திர விடுதியில் சூதாட்டம் - 14 பேர் அதிரடியாக கைது
சென்னை, 30 மே (ஹி.ச.) சென்னை தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு அந்த நட்சத்திர விடுதியில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விடுதியின் தனி அறையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்
சென்னை நட்சத்திர விடுதியில் சூதாட்டம் - 14 பேர் அதிரடியாக கைது


சென்னை, 30 மே (ஹி.ச.)

சென்னை தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு அந்த நட்சத்திர விடுதியில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது விடுதியின் தனி அறையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலேயே 14 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டுக்கட்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தொகை பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என கூறப்படுகிறது.

அவர்களிடம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

நட்சத்திர விடுதி நிர்வாகத்திற்கு இந்த சூதாட்டம் குறித்து தெரியுமா, இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b