Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச)
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 1 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக 1.6.2026 முதல் மீண்டும் விண்ணப்ப பதிவு துவங்கப்படும். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பாக விவரங்களை www.tngasa.in என்ற இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044 -24343106, 24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b