கனிமவள லாரிகளை முறைகேடாக செல்ல அனுமதித்த 3 போலீசார் பணியிடை நீக்கம்
கன்னியாகுமரி, 30 மே (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகளை முறைகேடாக செல்ல அனுமதித்த மூன்று போலீசார் பணியிடை நீக்கம் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கு
SP Stalin


கன்னியாகுமரி, 30 மே (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகளை முறைகேடாக செல்ல அனுமதித்த மூன்று போலீசார் பணியிடை நீக்கம் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் வழியாக ஏராளமான லாரிகளில் கற்கள் கேரளாவுக்கு தினந்தோறும் கொண்டு செல்லப்படுகின்றன. அதிக பாரம் ஏற்றி அதிவேகமாக செல்லும் டாரஸ் லாரிகளால் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்ற நிலையில், லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மேலும், ஆரல்வாய்மொழி, குமாரபுரம் ஆகிய சோதனை சாவடிகளில் லாரிகளுக்கான அனுமதி சீட்டு தொடர்பான சோதனையும் நடைபெற்று வருகிறது. இதற்காக உதவி ஆய்வாளர் தலைமையில் ஐந்து போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அருமனை காவல் நிலைய தலைமை காவலர் கோபால், ஈத்தாமொழி காவல் நிலைய ஏட்டு வினோத், கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸ் வாட்சன் ஆகிய மூன்று பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கனிம வளத்தை ஏற்றி சென்ற டாரஸ் லாரிகளின் அனுமதிச்சீட்டை மூன்று பேரும் முறையாக பரிசோதிக்காமல் பணம் பெற்று அனுமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / ANANDHAN