இன்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார்
பெங்களூரு, 30 மே (ஹி.ச.) கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மேலிட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். முதல்வர் சித்தராமையா
சித்தராமையா


பெங்களூரு, 30 மே (ஹி.ச.)

கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மேலிட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

முதல்வர் சித்தராமையாவின் பதவி விலகலை ஆளுநர் ஏற்றதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

தற்போதைய கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P