Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 30 மே (ஹி.ச.)
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியில் உள்கட்சி அதிருப்தி அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சில மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வரும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், கட்சிக்கு எதிராக செயல்படுவோர் மற்றும் கட்சி மாறும் தலைவர்களை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் மமதா பானர்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கவிதைக்கு ‘கிர்கிட்டி’ (உசரவெள்ளி) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தக் கவிதையில்,
அடிக்கடி நிறம் மாற்றும் உசரவெள்ளியுடன் கட்சி மாறும் தலைவர்களை ஒப்பிட்டு, அவர்களின் வாய்ப்புவாத அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கட்சிக்கு நெருக்கடியான நேரத்தில் துணை நிற்காமல் தனிப்பட்ட நலனுக்காக செயல்படுவோர் மீது கடும் சாடல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்படியான செயல் கட்சித் துரோகமாக கருதப்படுவதாகவும், அரசியலில் நெறிமுறைகள் மற்றும் நன்றியுணர்வு குறைந்து வருவதாகவும் அவர் தனது கவிதையில் வேதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அந்தக் கவிதையில் எந்த தலைவரின் பெயரும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA