கோட்டூர்புரம் குடியிருப்பு பயனாளிகள் கைது - தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை, 30 மே (ஹி.ச.) சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்திருப்பது கடும்
டிடிவி தினகரன்


சென்னை, 30 மே (ஹி.ச.)

சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

தங்களின் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய துறை சார்ந்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் நேரில் வராமல் காவல்துறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரப் போக்காகும் என்று விமர்சித்துள்ளார்.

மேலும், கோட்டூர்புரம் குடியிருப்பு பயனாளிகளுக்கான வீடுகள் விரைந்து ஒதுக்கீடு செய்யப்படுவதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam