முறைகேடு புகார் எதிரொலி- குற்ற வழக்கு தொடர்வுதுறை இயக்குநர் கிருஷ்ணராஜா பதவி நீக்கம்
சென்னை, 30 மே (ஹி.ச) தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை (Directorate of Prosecution) இயக்குநராக பணியாற்றி வந்த ஜி. கிருஷ்ணராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு
Krisha


சென்னை, 30 மே (ஹி.ச)

தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை (Directorate of Prosecution) இயக்குநராக பணியாற்றி வந்த ஜி. கிருஷ்ணராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றிய ஜி. கிருஷ்ணராஜா, கடந்த 2024 நவம்பர் மாதம் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், புதிய அரசு பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டத்துறையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குற்ற வழக்குகள் தொடர்பான பிரிவில் சில முறைகேடு புகார்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் வழங்கிய உத்தரவின் பேரில் ஜி. கிருஷ்ணராஜாவை இயக்குநர் பதவியில் இருந்து நீக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், முறைகேடு புகார்கள் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை.

Hindusthan Samachar / P YUVARAJ