பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை உருவாக்கி உள்ளார் விஜய் - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, 30 மே (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொளப்பலூர் பகுதியில் கணவன், மனைவி இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கக் கூடிய ஒன்று. நான
Sengottaiyan


ஈரோடு, 30 மே (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

கொளப்பலூர் பகுதியில் கணவன், மனைவி இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கக் கூடிய ஒன்று. நானும் ஒருவனாக இருந்து இந்த துக்கத்தில் கலந்து கொள்கிறேன்.

இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தமிழக முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார்.

துறையைப் பொறுத்தவரையில் அனைத்து பணிகளையும் விரைந்து செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக இது போன்ற சம்பவங்கள் என்பது எதிர்காலத்தில் இல்லாத அளவிற்கு உருவாக்குவது தான் இந்த துறை கடமை என்ற முறையில் நாங்கள் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

தமிழக முதல்வரை பொறுத்தவரையில் ஒரு ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்பதுதான் லட்சிய பயணமாக உள்ளது. அதை நிறைவேற்ற எண்ணற்ற வகையில் நாங்கள் அனைவரும் அதற்காக பணிகளை தெளிவோடும் மேற்கொண்டு வருகிறோம்.

எல்லோருக்கும் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் நம் நோக்கம். இதற்கு எல்லோருடைய ஒத்துழைப்போடும், இந்தியாவில் முதல் முறையாக பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை உருவாக்கியுள்ள ஒரு தலைவர் விஜய்.

36 சதவீத வாக்குகளை பெறுகிற ஒரு இயக்கத்திற்கு தனித்து நின்று அந்த செயல்பாடுகளை காட்டியிருக்கிறார்.

இந்திய நாட்டின் வரலாற்றில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு இன்று தமிழகத்தில் அவரை முழுமையாக மக்கள் நம்பி, இவர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற முறையில் வாக்களித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN