4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
சென்னை, 30 மே (ஹி.ச.) தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த
நயினார்


சென்னை, 30 மே (ஹி.ச.)

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை தவெக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நியமன நடைமுறையை எளிதாக்கும் வகையில், 6 மாதங்களுக்குள் தேர்வு செயல்முறையை முடிக்க சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் வயது வரம்பில் தளர்வு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்ட போதிலும், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

முந்தைய ஆட்சியைப் போல நியமனத்தில் தாமதம் ஏற்படுத்தாமல், ஆசிரியராகும் கனவில் உள்ள பட்டதாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் தலைமையிலான தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவின்படி காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P