Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 30 மே (ஹி.ச.)
நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவரை மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பரமசாமி மகன் அண்ணாவி (75) கூலித்தொழிலாளியான அவர் அதேபகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை குழந்தை அழுது கொண்டே நடந்த சம்பவத்தை கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ,
நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் விமலா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து அண்ணாவி என்ற 75 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை இன்று கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN