வைகாசி விசாகம் - பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
மதுரை, 30 மே (ஹி.ச.) வைகாசி விசாகத்தை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் முருகபெருமானின் அறுபடைவீடுகளில் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில
Pazhamudircholai


மதுரை, 30 மே (ஹி.ச.)

வைகாசி விசாகத்தை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

இதில் முருகபெருமானின் அறுபடைவீடுகளில் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் பால்குடங்கள் சுமந்துவந்தும், காவடி தூக்கி வந்தும் தங்களது நேற்றி கடனை செலுத்தினர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு மூலவர் வள்ளி-தெய்வானை சமேத முருகபெருமானுக்கு தங்க கிரீடம் , வைரவேல், வைர சேவல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.

அதே போல் உற்சவருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சண்முகர் அர்சனையும், பால், பன்னீர், இளநீர், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம் , விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்கள்கொண்டு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை கந்தசஷ்டி மண்டபத்தில் இருந்து சிம்மாசனத்தில் சாமி புறப்பாடும் அதனை தொடர்ந்து தங்கதேர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

விசாகத்தை முன்னிட்டு கள்ளந்திரி, உறங்கான்பட்டி, மேலூர், A. வல்லாளபட்டி, கிடாரிபட்டி, அட்டாபட்டி, அப்பன்திருப்பதி, நத்தம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

21 ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வுடன் தொடங்கிய 10 நாள் பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா இன்று இனிதே நிறைவு பெறுகிறது.

தரிசனத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் மதுரை, மேலூர், நத்தம் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் இயக்கப்பட்டன.

Hindusthan Samachar / ANANDHAN