சைதாப்பேட்டை வீடு ஒதுக்கீடு புகார்- அரசு விளக்கம்
சென்னை, 30 மே (ஹி.ச.) சென்னை சைதாப்பேட்டை சுப்புபிள்ளை தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய (TNUHDB) குடியிருப்புகளில், சாதி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு அரசு விளக்கம் அளித்துள்ளது. புதிதாக புனரம
Housing board


சென்னை, 30 மே (ஹி.ச.)

சென்னை சைதாப்பேட்டை சுப்புபிள்ளை தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய (TNUHDB) குடியிருப்புகளில், சாதி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதிதாக புனரமைக்கப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் பட்டியல் சாதியினருடன் வசிப்பதை எதிர்த்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக தனி குலுக்கல் நடத்தப்பட்டதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர்.

சுமார் 450 குடியிருப்பு அலகுகள் கொண்ட இந்தத் திட்டத்தில், ‘ஏ’ பிளாக்கில் உள்ள 36 வீடுகள் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சாதி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்றும், அனைத்து வீடுகளும் விதிமுறைகளின்படி குலுக்கல் முறையில் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், வீடு ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவையான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P