Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜி பவானிஸ்வரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்பி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான அதிகாரிகள் மற்றும் காவலர்களை நியமிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 18 போலீசாரை நியமித்து தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ