Enter your Email Address to subscribe to our newsletters


திருச்செந்தூர்
, 30 மே (ஹி.ச.)
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவே மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றே சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை எந்தக் கடவுளும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று வரை சாதியை அடிப்படையாகக் கொண்டு ஆதரவாக செயல்படுவதாக பேசியவர்கள், இன்று அதே சமூகத்தை அவமதித்துவிட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
தவறு செய்தவர்களை தண்டிக்கும்போது ஏன் பதற்றமும் கொந்தளிப்பும் ஏற்படுகிறது என்பது புரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மேலும் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாகக் கூறிய அமைச்சர் ரமேஷ், அவை குறித்த தகவல்களை விரைவில் வெளிக்கொணருவேன் என்றும், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ