Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 30 மே (ஹி.ச.)
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
முருகப்பெருமானின் அவதார நாளாக கருதப்படும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தனர்.
கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 6 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P