விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- கி.வீரமணி வலியுறுத்தல்
சென்னை, 30 மே (ஹி.ச.) நாட்டில் விலைவாசி உயர்வு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, பொருளாதார நெருக்கடியை ஒப்புக்கொள்ளும் நிலை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இத
வீரமணி


சென்னை, 30 மே (ஹி.ச.)

நாட்டில் விலைவாசி உயர்வு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, பொருளாதார நெருக்கடியை ஒப்புக்கொள்ளும் நிலை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 11 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை பலமுறை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியின் ‘எதிர்பாரா இடர் நிதி’ இருப்பு குறைக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய பாஜக அரசு உடனடி மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாயிகளின் வருமான உயர்வு, விலைவாசி கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கோயில் விழாக்கள் மற்றும் விளம்பர அரசியலால் மக்களின் அன்றாட பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும், தெளிவான பொருளாதார கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் அவசியம் என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P