Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 30 மே (ஹி.ச.)
விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலக சாவியை சி.வி.சண்முகம் தரப்பினர் புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் ஒப்படைத்தனர்.
அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிவி.சண்முகம் என இரு தரப்பாக செயல்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து சிவி.சண்முகம் நீக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டார்.
இதனால் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை சி.வி.சண்முகம் தொடங்கினார்.
ஒலக்கூா் ஒன்றியத்துக்குள்பட்ட மேல்பாக்கம், நெய்குப்பி, வடபூண்டி, கொடியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்த வேனில் சென்ற சி.வி.சண்முகம் வாக்காளா்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தாா்.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தை புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்க சிவி.சண்முகம் தரப்பினர் மறுத்து வந்த நிலையில் கட்சி அலுவலகத்தை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று சிவி.சண்முகம் தரப்பினர் கட்சியின் அலுவலக சாவியை புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN