நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மறைவு - பெசன்ட் நகரில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை, 31 மே (ஹி.ச.) நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். சென்னை தனியார
அஜித்


சென்னை, 31 மே (ஹி.ச.)

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு, அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தாயார் இறுதிச்சடங்கு தனிப்பட்ட நிகழ்வாக நடக்கும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் சகோதரர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்,

எங்களது தாயார் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்துள்ளதாகவும், அவரது இறுதிக் காலத்தில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

தங்களது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அனைவரது அன்பும் தங்களை நெகிழச் செய்துள்ளதாகவும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அஜித் குமாரின் தாயார் உடலுக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று (ஞாயிறு) காலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

நடிகர் அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் மோகினியின் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது.

அதனை தொடர்ந்து காலை 8:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக இறுதிச்சடங்கு செய்யப்படவுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P