அமராவதி நகர வளர்ச்சிக்கு முக்கிய முடிவுகள் – சிஆர்டிஏ கூட்டத்தில் ஒப்புதல்
அமராவதி , 31 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதியின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 61வது சிஆர்டிஏ ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 18 முக்கிய முன்மொழிவு
A


அமராவதி , 31 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதியின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 61வது சிஆர்டிஏ ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மொத்தம் 18 முக்கிய முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், அமராவதி உயர் நீதிமன்ற கட்டிடங்களுக்கு அருகில் ரூ.547.07 கோடி செலவில் அடிப்படை வசதிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், நகரின் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்த தனி தீயணைப்பு பிரிவு அமைக்கவும், கட்டிடத் தகராறு வழக்குகளை விரைவாக தீர்க்க Building Tribunal அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அமராவதியை சுற்றியுள்ள 9 மாவட்டங்களை இணைக்கும் வகையில் “அமராவதி எகனாமிக் ரீஜியன்” வளர்ச்சி திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நகரத்தின் அனைத்து கட்டிடங்களிலும் மைய குளிரூட்டும் (Central Cooling System) வசதி ஏற்படுத்தவும், நகர்ப்புறங்களில் வணிக மற்றும் பொருளாதார செயல்பாடுகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், City Gas Distribution திட்டம், ஏ.டி.எம். வசதிகள் விரிவாக்கம், மற்றும் 495 விவசாயிகளுக்கு பதிவு கட்டண விலக்கு உள்ளிட்ட பல முடிவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

“யோகா ஆண்ட்ரா@2026” திட்டம் – ஜூன் 21ல் பிரம்மாண்ட யோகா விழா

அமராவதியில் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு “யோகா ஆண்ட்ரா@2026” திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.

கிருஷ்ணா நதி பாலப்பகுதியில் நடைபெறும் மாநில அளவிலான யோகா நிகழ்ச்சியில் சுமார் 25,000 பேர் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரே நேரத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

14 நாட்கள் முழுவதும் மாநிலம் முழுவதும் யோகா விழா நடைபெறவுள்ளதுடன், பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களிலும் சிறப்பு யோகா பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.

நகர வளர்ச்சி திட்டங்களும், யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதால், ஆந்திர அரசு நிர்வாகத்தில் புதிய வேகம் காணப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA