Enter your Email Address to subscribe to our newsletters

நாயுடுபேட்டை , 31 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், நெல்லூர் மாவட்டம் நாயுடுபேட்டையில் அமைந்துள்ள ஜிந்தால் நிறுவனத்தின் ‘வேஸ்ட் டு எனர்ஜி’ (குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்) ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஆலையின் செயல்பாடுகள், மின்சார உற்பத்தி நடைமுறைகள் மற்றும் தினசரி பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
மேலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு, தற்போதைய மின் உற்பத்தி அளவு மற்றும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனை விலை உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, காக்கிநாடாவில் ஜிந்தால் நிறுவனம் அமைத்து வரும் ‘வேஸ்ட் டு எனர்ஜி’ ஆலையின் பணிகள் தாமதமடைந்தது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நிறுவன அதிகாரிகள்,
அந்த ஆலையை வருகிற நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் பவன் கல்யாண் முக்கியத்துவம் அளித்தார்.
இந்த வகை மின் உற்பத்தி ஆலைகளால் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் மாசுபாடு, அதனை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜிந்தால் நிறுவன பிரதிநிதிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுக்கு 4 முறை ஆலையை ஆய்வு செய்து அறிக்கைகள் வழங்கி வருவதாக தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA