Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா , 31 மே (ஹி.ச.)
நடிகரும் தயாரிப்பாளருமான பண்ட்லா கணேஷ், ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் மீது தனது ஆழ்ந்த மரியாதையையும் ரசிகத்தனத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பவன் கல்யாண் குறித்து மனம் திறந்து பேச ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
அந்த வாய்ப்பு கிடைத்தால், பவனின் குணநலன், நேர்மை மற்றும் அவரின் உயர்ந்த மனிதாபிமான பண்புகள் குறித்து உலகிற்கு தெரிவிப்பேன்.
“பதவி, அதிகாரம் அல்ல; ஒரு மனிதனின் மதிப்பு அவரது நடத்தை, பேச்சு மற்றும் மனப்பாங்கில் தான் உள்ளது.
என்பதை நிரூபித்தவர் பவன் கல்யாண்” என்று பண்ட்லா கணேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
பவன் கல்யாண் குறித்து தன்னுடைய மனதில் இருக்கும் மரியாதையை வெளிப்படுத்தும் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகள், பவன் கல்யாண் இன்று நாயுடுபேட்டையில் உள்ள ஜிந்தால் வேஸ்ட் டு எனர்ஜி பிளாண்டை பார்வையிட்ட நேரத்தில் வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
Hindusthan Samachar / M.DEEPAK RAJA