Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது.
அதிமுக மூத்த தலைவர் சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இந்த இடம் காலியானது.
சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை துறந்தார்.
இதனால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்காக தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி ஜூன் 8-ஆம் தேதி வரை நடைபெறும். தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு, வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற ஜூன் 11-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தால், ஜூன் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
போட்டியின்றி ஒரே வேட்பாளர் மட்டும் இருக்கும் பட்சத்தில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.
Hindusthan Samachar / vidya.b