மலைப்பாதையில் பெரும் சிக்கல்- பத்ரிநாத் யாத்திரையில் வாகனங்கள் முடங்கியதால் பரபரப்பு!
பத்ரிநாத் , 31 மே (ஹி.ச.) உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் புனித யாத்திரைகளால் பத்ரிநாத் நோக்கி செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தொடங்கிய சார் தாம் யாத்திரை மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் யாத்திரை காரணமா
A


பத்ரிநாத் , 31 மே (ஹி.ச.)

உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் புனித யாத்திரைகளால் பத்ரிநாத் நோக்கி செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தொடங்கிய சார் தாம் யாத்திரை மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் யாத்திரை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

மலைப்பாதைகள் குறுகலாக இருப்பதாலும், ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வருவதாலும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல மணி நேரமாக வாகனங்களில் சிக்கிய யாத்திரிகர்கள் உணவு, தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜீரோ பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டதால் அவசர மருத்துவ வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வன்-வே (ஒருவழி) போக்குவரத்து முறையை அமல்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு திசையில் மட்டுமே வாகனங்களை அனுமதித்து நெரிசலை குறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

யாத்திரிகர்கள் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA